மோட்டார் சைக்கிளில் பதுங்கியிருந்த பாம்பு.. போராடி பிடித்த தீயணைப்பு வீரர்கள்

4 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு படைவீரர்கள், உடுமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.;

Update:2025-11-11 01:16 IST

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள போடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால்சாமி. தொழிலாளி. நேற்று இவர், மோட்டார் சைக்கிளில் உடுமலையை நோக்கி வந்து கொண்டிருந்தார். நகராட்சி அலுவலகம் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் ஸ்பீேடா மீட்டர் அருகே பாம்பின் வால் பகுதி வெளியே தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படைவீரர்கள், பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பாம்பு, மோட்டார் சைக்கிளில் பெட்ேரால் ேடங்க் அடிப்பகுதியில் பதுங்கி இருந்தது. இதனால் அந்தப்பாம்பை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்கள் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் பாம்பு வெளியே தெரிந்தது. பின்னர் அந்தப்பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது. அது 4 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் வகை பாம்பு ஆகும். அந்த பாம்பை தீயணைப்பு படைவீரர்கள், உடுமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பாம்பு, உடுமலை வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்