புரட்டாசி முதல் சனிக்கிழமை: தூத்துக்குடி பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.;

Update:2025-09-20 19:49 IST

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதமிருந்து, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலையில் கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று முதல் சனிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கும் 7 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன, கோவில் பிரதான பட்டர் வைகுண்ட ராமன் பூஜைகளை நடத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்