கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி
திருநெல்வேலியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் கீழூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் விளைவாக கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் விரைந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறிப்பு வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.