கஞ்சா புகைத்ததை காட்டிக் கொடுத்ததால் அடி, உதை - 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு

சிறுவர்கள் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.;

Update:2025-12-18 20:11 IST

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் 16, 17 வயதுடைய சிறுவர்கள் 4 பேர் கஞ்சா புகைத்தாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அவர்களின் பெற்றோர், அந்த சிறுவர்களை கண்டித்துள்ளனர். இதற்கிடையில், தங்களை பெற்றோரிடம் அதே பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள்தான் காட்டிக் கொடுத்ததாக அந்த 4 பேருக்கும் தகவல் கிடைத்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும், அந்த 2 சிறுவர்களை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர். இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் ஆமத்தூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுவர்களை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்