நீலகிரி வனப்பகுதியில் ராட்சத காட்டுத்தீ
மரங்கள் அனைத்தும் காய்ந்துள்ள நிலையில் சுமார் 50 மீட்டர் உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது.;
நிலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி இருக்கக்கூடிய வனப்பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் கடும் வறட்சி ஏற்பட்டு மரங்கள் முழுமையாக காய்ந்துள்ளது.
முதுமலை ஒட்டிய ஆச்சக்கரை பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்கள் உள்ளன. இந்த நிலையில் இன்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. மரங்கள் அனைத்தும் காய்ந்துள்ள நிலையில் சுமார் 50 மீட்டர் உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையின் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.