சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை - ஊட்டி கோர்ட்டு தீர்ப்பு

வாலிபர் ஒருவர் 17 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.;

Update:2025-08-21 21:57 IST

கோப்புப்படம் 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருவங்காடு கிராமிய அபிவிருத்தி இயக்க குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஹேமலதா கடந்த 30.1.2021 அன்று குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், கக்குச்சி அருகே சக்தி நகரை சேர்ந்த ராஜா (26 வயது) என்பவர், 17 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். எனவே, ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ராஜா கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் ராஜா குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15,500 அபராதம் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமார் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்றும், இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்