டியூசன் மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உமையாள்புரம் பகுதியை சேர்ந்தவர் அரசுப் பள்ளி ஆசிரியர் முருகன். இவர் கபிஸ்தலம் பகுதியில் டியூசன் சென்ட்டர் நடத்தி வருகிறார். அங்கு பல்வேறு மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், டியூசன் சென்ட்டருக்கு வந்த மாணவிக்கு முருகன் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியான நிலையில், ஆசிரியர் முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.