திருவண்ணாமலை சென்றடைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.;
சென்னை,
திருவண்ணாமலை மாவட்டம் வன்னியந்தாங்கல் பகுதியில் நாளை தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 1.30 லட்சம் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றே திருவண்ணாமலை சென்றடைந்தார். திருவண்ணாமலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல கூட்டம் நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடுகள் தொடர்பாக அவர் ஆய்வு செய்தார்.