மகள் இறந்த துக்கத்தில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூரில் மகள் இறந்த துக்கத்தில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கோப்புப்படம்
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் வீரானத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (52 வயது). இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மகள் அர்ச்சனா கடந்த ஆண்டு 9-ம் வகுப்பு படிக்கும் போது சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தந்தை வெங்கடேசன் மகள் அர்ச்சனாவை கண்டித்துள்ளார். மனவேதனை அடைந்த அர்ச்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த மன உளைச்சலில் வெங்கடேசன் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேங்கடேசன் மோட்டூர் குளக்கரை அருகில் உள்ள புளிய மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.கே.பேட்டை போலீசார் உயிரிழந்த வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.