“டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயாராக இருக்கிறேன்..” - நயினார் நாகேந்திரன்
ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.;
மதுரை,
மதுரையில் தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உடன் நேரடியாக சென்று சமரசம் பேச தயாராக இருக்கிறேன். டிடிவி தினகரன் வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது. டிடிவி தினகரன் ஏன் கூட்டணியில் இருந்து வெளியில் சென்றார் என அவரைச் சொல்லச் சொல்லுங்கள். திமுக ஆட்சியில் இருக்க கூடாது. ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும். திமுக என்றுமே தொடர்ந்து ஆட்சி அமைத்தது கிடையாது.
அமித்ஷா முன்னிலையில் தான் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக ஆக்க வேண்டும் என அண்ணாமலை கூட பேசியிருக்கிறார். எனவே எடப்பாடி பழனிசாமி தான் இந்த கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர். அண்ணாமலை கூட்டணியை சரியாக கையாண்டார் என சொல்லும் தினகரன் இதற்கு என்ன பதில் சொல்வார்?
இவ்வாறு அவர் கூறினார்.