நாகாலாந்து கவர்னர் விரைவில் நலம்பெற விழைகிறேன் - மு.க.ஸ்டாலின் பதிவு
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் (80 வயது) தற்போது நாகாலாந்து மாநில கவர்னராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலையில் இல.கணேசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மிகுந்த கவலை கொள்கிறேன். அவர் விரைவில் நலம்பெற்று, மீண்டும் நல்ல உடல்நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று விழைகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.