எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது: விஜய் மீது செல்லூர் ராஜு சாடல்
களத்தில் இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க மாடோம் என விஜய் கூறியிருந்தார்;
சென்னை,
ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், களத்தில் இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க மாடோம் என கூறியிருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது,
நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். எங்களை களத்தில் இல்லை என சொல்ல எவ்வளவு தைரியம். நாவை அடக்கி பேச வேண்டும். அதிமுக களத்தில் இல்லை என சொல்வது முட்டாள் தனம்.
விஜய் இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுளார் ? அவருக்கு என்ன பின்புலம் ? . நடிகர்களுக்கு ரசிகர்கள் கூடுதலாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் எம்.ஜி.ஆர்.ஆக முடியாது. எம்.ஜி.ஆர். என்பவர் ஒருவர் தான். என தெரிவித்தார்