சர்வதேச கழிப்பறை திருவிழா: திருவல்லிக்கேணியில் நடைபெற்ற கழிப்பறை நடைபயணம்

சர்வதேச கழிப்பறை திருவிழாவின் ஒரு அங்கமாக திருவல்லிக்கேணியில் கழிப்பறை நடைபயணம் நடைபெற்றது.;

Update:2025-06-14 13:51 IST

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப் (Washlab), சியர் (Cheer) மற்றும் ரீசைக்கிள் பின் (Recycle Bin) அமைப்புகள் இணைந்து கடந்த 4-ந்தேதி நடத்திய சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0-வின் ஒரு அங்கமாக, கழிப்பறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கழிப்பறை நடைபயண விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்றது.

இந்த நடைபயணத்தில் உளவியலாளர் சண்ணுதி சுரேஷ், ஆராச்சியாளர் விஷ்ணு வேணுகோபால், நகரத்தின் பல பகுதிகளிலிருந்து பல்வேறு துறை சார்ந்தோர், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வாஷ் லேப், சியர், ரீசைக்கிள் பின் அமைப்புகளை சார்ந்தவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கழிப்பறையில் தனிநபரின் உளவியல் குறித்த நேரடி அனுபவங்கள் மற்றும் உணர்வுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, பொதுக் கழிப்பறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பயன்படுத்தும் பொறுப்புணர்வு உள்ளிட்ட பல கருத்துரையாடல்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்