ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு: 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு - ஏ.ஐ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்தோடு முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
உலகமே ஏ.ஐ. நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஏ.ஐ.யால் வேலை வாய்ப்புக்கு பாதிப்பு இல்லாமல், விழிப்புணர்வு வேண்டும். தமிழ்நாட்டில் ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு உயர்தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில், சர்வம் ஏ.ஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழ்நாட்டின் தரவுகளைத் தமிழ்நாடே வைத்துக் கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்குப் பெரிய தரவு மையம் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து திட்டப் பயன்கள் குறித்து அமைச்சர் டிஆர்.பி. ராஜா மற்றும் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.