ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை - வெற்றி பெற்ற ஜெர்மனி அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
இந்தியா, அர்ஜென்டினா அணிகள் நம் மதிப்பினை வென்றுள்ளன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணிக்கு பாராட்டு தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணிக்கு பாராட்டுகள். கடுமையாக போராடிய ஸ்பெயின் அணிக்கும் பெரிய கைதட்டலை உரித்தாக்குகிறேன். முழு ஆற்றலை வெளிப்படுத்தி போராடிய இந்தியா, அர்ஜென்டினா அணிகளும் நம் மதிப்பினை வென்றுள்ளன.
தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை பன்னாட்டளவில் தனது திறனையும், உலகத்தரத்திலான தொடர் நடத்துவதையும், இனிய விருந்தோம்பலையும், விளையாட்டுத் துறையில் உயர்வினை ஊக்குவிக்கும் சிறந்த சூழலையும் நிரூபித்துவிட்டது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.