எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

அ.தி.மு.க. மாநில துணை தலைவர்கள் சக்கரவர்த்தி மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர்.;

Update:2025-12-11 15:11 IST

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஒரு கூட்டணியாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார்.

இதுபற்றி நயினார் நாகேந்திரன் அவருடைய எக்ஸ் சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினேன்.

இந்த நிகழ்வில் மாநில துணை தலைவர்கள் சக்கரவர்த்தி மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரும் உடன் இருந்தனர் என பதிவிட்டு உள்ளார். இதில், கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்