தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை
மீன்கள் கிடைக்கும் அளவு குறைவதால், மீன் விலை உயரக்கூடும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.;
கோப்புப்படம்
சென்னை,
ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காரணமாக, ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை (61 நாட்கள்) தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியான வங்கக் கடலில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இதனால், தமிழக கடலோர மீன்பிடி துறைமுகங்களில் உள்ள பத்தாயிரம் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாது. கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீன்கள் கிடைக்கும் அளவு குறைவதால், மீன் விலை உயரக்கூடும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.