‘தமிழ்நாடு கல்வியில் அடுத்த பரிணாமத்தை அடைவதற்கு மடிக்கணினி வழிவகுக்கும்’ - மயில்சாமி அண்ணாதுரை

மடிக்கணினி திட்டம் சமத்துவத்தின் சின்னம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-06 03:21 IST

சென்னை,

‘உலகம் உங்கள் கையில்’ நிகழ்ச்சியில் 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:-

“மாணவ-மாணவிகளாகிய நீங்கள் இப்போது வாங்கும் மடிக்கணினி, உங்களில் ஒளிந்திருக்கும் கல்வியாளர், தொழில் பொறியாளர், கவிஞர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர், ஆட்சியாளர் என இன்னும் பிறரையும் வளர்த்தெடுக்கும். சாதி, மதம், செல்வம் எதுவும் கல்விக்கு தடையில்லை என்று தமிழ்நாடு நமக்கு கொடுத்த கல்வியினால் அதை சொல்ல முடிகிறது.

நித்தம் கல்வி என்ற டிஜிட்டல் உலகுக்கு இனி தடையில்லை என்பதை மெய்ப்படுத்ததான், உலகம் உங்கள் கையில் திட்டம். இது புது விடியல். 20 லட்சம் மடிக்கணினிகள், அதனுடன் செயற்கை நுண்ணறிவுகள் மாணவ-மாணவிகள் கையில் சேரும் போது, அது சாதனமாக அல்லாமல், சாதிக்க வைக்கும் சக்தியாக இருக்கும்.

மடிக்கணினி ஒரு பிரபஞ்சம். ஒரு சொடக்கில் அனைத்தையும் பார்க்கவும், படிக்கவும் முடியும். தமிழ்நாடு கல்வியில் அடுத்த பரிணாமத்தை அடைவதற்கு இந்த மடிக்கணினி வழிவகுக்கும். இந்த திட்டம் சமத்துவத்தின் அடுத்த சின்னம். எதிர்காலத்தின் விதை. தமிழ்நாடு இந்தியாவில் தனித்துவம் மிக்கதாக இருக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்