ஆலந்தூர் முதல் வண்ணாரப்பேட்டை வரை கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும், வேகமான பயணத்தை வழங்குவதற்காகவும், கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.;

Update:2026-01-07 17:08 IST

சென்னை,

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், நீல வழித்தடத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரெயில் பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மெட்ரோ ரெயிலுக்கு காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும், வேகமான பயணத்தை வழங்குவதற்காகவும், கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

கூடுதலாக இயக்கப்படும் இந்த மெட்ரோ ரெயில் சேவைகளின் மூலம், நீல வழித்தடத்தில் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை, நெரிசல் மிகுந்த நேரங்களில் (காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை) 6 நிமிட இடைவெளி மற்றும் 3 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில்கள் இதன் பிறகு முற்றிலுமாக 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்