அஞ்சலையம்மாள் ஆற்றிய அரும்பணிகளை போற்றி பெருமை கொள்வோம்: விஜய்

அஞ்சலையம்மாளின் 135-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படப்படுகிறது.;

Update:2025-06-01 12:32 IST

சென்னை,

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகங்களைச் செய்தவரும், மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட துணிச்சலுக்கு சொந்தக்காரருமான கடலூர் அஞ்சலையம்மாளின் 135-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படப்படுகிறது.

இதையொட்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள். கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்தநாளில், தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்