முரசொலி செல்வம் கருத்துகளுடன் களமாடுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update:2025-04-24 15:50 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

திராவிட இயக்கத் தளகர்த்தர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் காலந்தொட்டு, மாணவப் பருவத்தில் இருந்து மறையும் வரை கழகத்தில் பயணித்து, எனக்கு ஒரு மூத்த சகோதரனாக இருந்து வழிநடத்திய மதிப்பிற்குரிய 'முரசொலி செல்வம்' அவர்களின் பிறந்தநாளான இன்று மாலை, 35 ஆண்டுகள் அவர் ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது, அவரது 'சிலந்தி கட்டுரைகள்' நூல் வெளியிடப்படுகிறது.

சீரிய அவரது கருத்துகளைத் துணைக்கொண்டு களமாடுவோம்! வெல்வோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்