குடிநீர் தொட்டியில் பல்லி- மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

பள்ளி குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 7 மாணவ- மாணவிகளுக்கு வாந்து, மயக்கம் ஏற்பட்டது.;

Update:2025-08-08 23:40 IST

சேலம்,

சேலம் மாவட்டம் பூமாத்துப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 55 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்கள் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்தனர். பின்னர் தண்ணீர் வராத நிலையில் தொட்டியை திறந்து பார்த்தனர். அப்போது தொட்டியில் இறந்து கிடந்த பள்ளியை பார்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து பள்ளி குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 7 மாணவ- மாணவிகளுக்கு வாந்து, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கபட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனையடுத்து குடிநீர் தொட்டி முறையாக சுத்திகரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்