மதுரை: ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு வெளியே தீ விபத்து

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.;

Update:2025-03-09 17:42 IST

மதுரை மாவட்டம் கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் உள்ளது. இந்த அரங்கத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது. அப்போது அரங்கத்தின் அருகில் இருந்த பணியாளர்கள் தங்கும் பகுதியில் திடீரென தீ கொளுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு அரங்கின் வெளிப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் அப்பகுதி சிறிதுநேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்