மதுரை: சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
வாலிபரின் தொல்லை குறித்து சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்தார்.;
மதுரை,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழ்நாச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகன்(வயது 21). இவர் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியிடம் காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமி, தனது பாட்டியிடம் தெரிவித்தார்.
இதனை அறிந்த பாட்டி, சமயநல்லூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து நாகனை கைது செய்தனர்.