பராமரிப்பு பணிகள்: போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரெயில் நாளை மறுநாள் ரத்து
போத்தனூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மெமு ரெயில் நாளை மறுநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
வடகோவை ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) போத்தனூர்-மேட்டுப்பாளையம் இடையே பகல் 3.30 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (எண்-66616) மற்றும் மேட்டுப்பாளையம் - போத்தனூர் இடையே பகல் 1.05 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (எண் -66615) ரத்து செய்யப்படுகிறது.
மேலும் நாளை மறுநாள் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்-12675) மற்றும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு கோவைக்கு இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்-12243) ஆகிய 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இருகூரில் இருந்து போத்தனூர் ரெயில் நிலையத்திற்கு திருப்பி விடப்படும்.
இந்த 2 ரெயில்களும் அன்றைய தினம் கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு செல்லாது. அன்றைய தினம் எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர். ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படும் பெங்களூரூ எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்-12678) கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு பதிலாக பகல் 12.50 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.