மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றவர் கைது
இரும்பு கதவில் மின்சாரத்தைப் பாய்ச்சி, தரையில் தண்ணீர் ஊற்றி வைத்துள்ளார்.;
வேலூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் அன்பழனி (45). இவர் தனது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்காக வீட்டின் நுழைவாயிலில் உள்ள இரும்பு கதவில் மின்சாரத்தைப் பாய்ச்சி, தரையில் தண்ணீர் ஊற்றி வைத்துள்ளார்.
மனைவி அன்பழனி (45) கதவை திறந்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் அன்பழகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மனைவியை அன்பழகன் 3வது முறை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து அன்பழகனை போலீசார் கைதுசெய்தனர்.