நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் 1ம் தேதி முதல் வகுப்புகள் செயல்படும் - துணை வேந்தர் அறிவிப்பு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது;
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 28ம் தேதி முதலாம் ஆண்டு வரலாறு படிக்கும் மாணவர்களுக்கும், 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பைக் பார்க்கிங் செய்வதில் இந்த மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்தார்.
இதையடுத்து காயமடைந்த மாணவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுவரை 3 மாணவர்களை கைது செய்துள்ளனர். அதேவேளை, மோதலை தொடர்ந்து பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக துணை வேந்தர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வரும் 1ம் தேதி முதல் வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் என்று துணை வேந்தர் அறிவித்துள்ளார்.