சென்னையில் இன்று இறைச்சிக் கடைகள் செயல்பட தடை

இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.;

Update:2026-01-16 08:07 IST

கோப்புப்படம் 

சென்னை,

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு;

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன. 16) பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய 4 இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவுப்படி மூடப்படும். எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்