ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் எம்ஜிஆர் - டிடிவி தினகரன் புகழஞ்சலி
எம்.ஜி.ஆரின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் இதயக்கனி, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், கோடிக்கணக்கான மக்களின் புன்னகையாகவும், புது நம்பிக்கையாகவும் திகழ்ந்த ஆகச்சிறந்த ஆளுமை பாரதரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் இன்று…
மக்களுடன் மக்களாக வாழ்ந்து, அவர்களுக்காக அயராது உழைத்து, நாடுபோற்றும் நல்லபல திட்டங்களை செயல்படுத்தி, தமிழக மக்களின் இதயக் கோவிலில் மக்கள் திலகமாய், மன்னாதி மன்னராய் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.