மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

தியாகராஜநகர், களக்காடு, திசையன்விளை, விஜயாபதி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;

Update:2025-06-15 12:43 IST

திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், தியாகராஜநகர் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (17.6.2025, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் பின்வரும் நேரத்தில் மின் விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:

தியாகராஜநகர், மகாராஜாநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, குத்துக்கல், கொடிக்குளம், முத்தூர், I.O.B. காலனி, தாமிரபதி காலனி, மல்லிகா காலனி, ஸ்ரீராமன் குளம், AR Line, கோரிப்பள்ளம், ரயில்வே பீடர் ரோடு, EB காலனி, ராஜேந்திரன்நகர், ராம்நகர், காமராஜர் சாலை, அன்புநகர், என்.எச்.காலனி, சித்தார்த்நகர் மற்றும் லக்கிகாலனி ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

களக்காடு, திசையன்விளை, விஜயாபதி, திசையன்விளை துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (17.6.2025, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் பின்வரும் நேரத்தில் மின் விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை:

கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம், திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:

களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சி மதில்வரை ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்