கோடநாடு வழக்கில் இதுவரை 245-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை - அரசு தரப்பு விளக்கம்

கோடநாடு வழக்கில் இதுவரை 245-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-02-21 18:04 IST

நீலகிரி,

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், இதுவரை 245-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரிடம் வெளிநாட்டில் இருந்து பேசிய நபர் யார்? என்பதை தெரிந்து கொள்ள இன்டர்போல் அமைப்பிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும், இது தொடர்பாக இன்டர்போல் அமைப்புக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்