மக்கள் வயிறு நிறைய மாபெரும் புரட்சி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன் - மு.க.ஸ்டாலின் புகழாரம்

வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;

Update:2025-09-27 11:39 IST

சென்னை,

சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றியதாவது;

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை இந்தியா என்றும் மறக்காது. வரலாற்றில் ஒரு சிலர் தான் பலகோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வகையில் வாழ்ந்துள்ளனர். எம்.எஸ்.சுவாமிநாதன் அத்தகையவர். மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர். பலமுறை எம்.எஸ்.சுவாமிநாதனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

நாட்டில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் வாடியபோது மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாக இருந்தவர். வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர். இந்திய பசுமை புரட்சியின் தந்தை என உலகமே அவரை அழைத்தாலும் நமக்கு அவர் உணவுத்துறையை பாதுகாத்தவர். எம்.எஸ்.சுவாமிநாதனின் கடமைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் வேளாண் மாணவர்கள், விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்