தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வதற்கு வேண்டிய பணிகளை ஆற்றுங்கள்: நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்;

Update:2025-07-13 14:28 IST

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பூத்களை வலிமைப்படுத்தும் சீரியப் பணியை மேற்கொள்ளவிருக்கும் பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது அன்பு அறிவிக்கை!

அறப்பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் களைச்செடியான திமுக ஆட்சியை அகற்றுவதுடன், பட்டிதொட்டியெங்கும் நமது தமிழக பாஜக-வின் வேர்களைப் பலப்படுத்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை தமிழகத்தில் அமையச் செய்ய அடித்தளமிடும் அரும்பணியே தங்களுடையது. எனவே, இதில் மனப்பூர்வமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வதற்கு வேண்டிய பணிகளை ஆற்றுங்கள் என உளமார வேண்டுகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! வெற்றியும் நமதே! நாளையும் நமதே. என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்