நீட் முடிவுகள்: முதல் 100 இடங்களில் இடம் பிடித்த 6 தமிழக மாணவர்கள் - நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி

எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்களாக வாழ்த்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update:2025-06-14 22:09 IST

சென்னை,

தமிழக பா.ஜக. தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் 100 இடங்கள் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் இடம் பிடித்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சியளிக்கிறது.

அரசியல் ரீதியான அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து தங்களது அயராத உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் நீட் தேர்வினை எதிர்கொண்டவர்களுக்கும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்வானவர்களுக்கும் முதல் நூறு இடங்களைப் பிடித்து சாதித்தவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்! நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்களாக மக்கள் சேவையில் சிறந்து விளங்கவும் இம்முறை வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனம் தளராது மீண்டு முயற்சிக்கவும் வாழ்த்துகிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்