நெல்லை சாலை விபத்து - சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு

நாங்குநேரி அருகே கடந்த மாதம் 27ம் தேதி அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-05-07 17:37 IST

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நான்கு வழிச்சாலையில் கடந்த மாதம் 27ம் தேதி அன்று இரண்டு கார்கள் மோதிய விபத்தில், ஆண்கள் மூவர், பெண்கள் இருவர், குழந்தைகள் இருவர் என 7 பேர் பலியாகினர். நாங்குநேரியை அடுத்த தளபதி சமுத்திரம் கீழுர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார், விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜோபினா என்கிற சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்