சிறுவனால் கர்ப்பமான நர்சிங் மாணவி... 5 மாத கருவை கலைத்ததால் நேர்ந்த விபரீதம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள கிளினிக்கில் மாணவி 5 மாத கருவை கலைத்ததாக தெரிகிறது.;

Update:2025-08-28 18:20 IST

கோப்புப்படம்

திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கொடிவலசா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சண்முகப்பிரியா (19 வயது) டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சிறுவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகியதால் சண்முகப்பிரியா கர்ப்பமானார்.

இது குறித்து ஆரம்பத்தில் சண்முகப்பிரியா பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்தார். இந்த நிலையில் அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள கிளினிக்கில் மாணவி சண்முகப்பிரியாவின் 5 மாத கருவை கலைத்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த அவருக்கு தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் சண்முகப்பிரியாவை திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகப்பிரியா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருத்தணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு கருவை கலைத்த நர்சு மற்றும் உதவியாளர் ஆகிய 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியுடன் பழகிய உறவினரான சிறுவனிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்