சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் முதியவர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சண்முகத்தை போலீசார், கைது செய்தனர்.;

Update:2025-01-17 04:57 IST

முத்தூர்,

காங்கயம் அருகே நத்தகாடையூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் ஈரோடு மாவட்டம், சிவகிரியை சேர்நத சண்முகம் (வயது 62). இவர் 4 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாய், காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சண்முகத்தை கைது செய்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்