இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு கடித்ததில் டீக்கடை உரிமையாளர் உயிரிழந்தார்.;

Update:2024-12-09 12:46 IST

சிவகாசி,

சிவகாசியில் இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு கடித்ததில் டீக்கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் வெங்கடேசன். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டபோது அவரது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் பதுங்கியிருந்த கட்டுவிரியன் பாம்பு வெங்கடேசனை கையில் கடித்ததாக கூறப்படுகிறது. இதில் வாகனத்தில் இருந்து அவர் சரிந்து விழுந்தார்.

அருகே இருந்தவர்கள் பாம்பை அடித்துக் கொன்று வெங்கடேசனை திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்