ராமநாதபுரம்: கார் மோதியதில் ஒருவர் பலி - போலீசார் குவிப்பு

சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2025-05-04 07:45 IST

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கீழக்கரை கிழக்கு கடற்கரை சுற்றுச்சாலையில் தெற்குத்தரவை அம்மன்கோவில் பகுதியில் சிலர் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த மனோகரன் மகன் ராமநாதபிரபு (28) என்பவர் ஓட்டி வந்த கார், சாலையோரம் நின்றவர்களின் கூட்டத்தில் புகுந்தது.

இதில் 12 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பழனிக்குமார் (37), வள்ளிமாடன் வலசையை சேர்ந்த சிவா (30), ரித்திக்குமார் (20), பிரசாந்த் (25) ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இதில் சாத்தையா (55) என்பவர் மருத்த்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபிரபுவை கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கார் ஏற்றி ஒருவர் பலியாதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்