பட்டுக்கோட்டை: பள்ளி விடுதியில் சிற்றுண்டி அருந்திய 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-06-13 14:39 IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு பள்ளி ஆதிதிராவிடர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விடுதியில் இன்று காலை சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. சாப்பாடு, புளிக்குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவை சிற்றுண்டியாக வழங்கப்பட்டுள்ளது. இதை 30 மாணவிகள் சாப்பிட்டுள்ளனர்.

உணவு சாப்பிட்ட மாணவிகள் 30 பேருக்கும் வாந்தி, மயக்கம் என உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவிகள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்