தமிழ் இதழியலின் முன்னோடி சி.பா.ஆதித்தனார்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளில் புகழ் வணக்கங்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2025-09-27 11:52 IST

சென்னை,

`தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

தமிழ் இதழியலின் முன்னோடியாகப் பாமரருக்கும் எளிய மொழிநடையில் உலக நடப்புகளைக் கொண்டு சென்ற திரு. சி.பா. #ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளில், பன்முக ஆளுமையாகத் தமிழ் வரலாற்றில் உயர்ந்து நிற்கும் அவருக்கு என் புகழ் வணக்கங்கள் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்