சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-08-11 04:25 IST

மதுரை,

மதுரையை சோந்தவர் 17 வயது சிறுமி. இவரின் தந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இதனால் தனது தாய் பராமரிப்பில் சிறுமி வளர்ந்து வந்தார். மேலும் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஒரு கடையில் வேலை செய்தார். அப்போது சிறுமிக்கும், 19 வயது வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இது நாளைடைவில் காதலாக மாறியது. பின்னர் வாலிபர், ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு அவரை, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த நகர்நல அதிகாரி முத்துலட்சுமி, தெற்கு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்