நெல்லை கொக்கிரகுளத்தில் நாளை மின்தடை ஒத்திவைப்பு
கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.;
திருநெல்வேலி மின்பகிர்மான நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (5.7.2025, சனிக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களுக்காக தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.