பிரதமர் மோடி வளர்ச்சிக்கான வெற்றிப் பாதையில் நம்மை வழிநடத்திச் செல்கிறார்: நயினார் நாகேந்திரன்

உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் நான்காவது இடத்தை நோக்கி நாம் முன்னேறியுள்ளோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்;

Update:2025-05-31 12:48 IST

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

2024-2025 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதம் 7.4%-த்தை எட்டியுள்ளது என நமது மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டுமல்லாது முதன்மைத் துறை, கட்டுமானம், பாதுகாப்பு உள்ளிட்ட பல அரசுத் துறைகள் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துள்ளது நமது நாட்டின் பொருளாதார உள்கட்டமைப்பு வலுவாக உள்ளதற்கான சிறந்த சான்றாகும்.

மேலும், வரும் 2047 ஆம் ஆண்டிற்குள் நமது உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி, பாரதத்தை தன்னிறைவு அடையச் செய்யும் "விக்சித் பாரத்" பயணத்தில், படிப்படியாக வெற்றியை நோக்கி நாம் நகர்ந்து வருகிறோம் என்பதும் உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் நான்காவது இடத்தை நோக்கி நாம் முன்னேறியுள்ளோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, சிறந்த திட்டமிடல்கள் மூலமும் சீரிய தொலைநோக்குப் பார்வையுடனும் வளர்ச்சிக்கான வெற்றிப் பாதையில் நம்மை வழிநடத்திச் செல்லும் பிரதமர் மோடி அவர்களுக்கும் நமது மத்திய அமைச்சரவைக் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்