திருச்சி வழியாக சென்னை-குமரி இடையே இன்று சிறப்பு ரெயில்

சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி அதிவிரைவு ரெயில் இன்று இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்.;

Update:2026-01-23 14:02 IST

திருச்சி,

குடியரசு தினம் மற்றும் வார விடுமுறையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வண்டி எண் 06135 சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி அதிவிரைவு ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு நாளை (சனிக்கிழமை) பகல் 1 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

இதே ரெயில் மறுமார்க்கத்தில் வண்டி எண் 06136 கன்னியாகுமரி-சென்னை கடற்கரை (பீச்) அதிவிரைவு ரெயில் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 9.35 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, 27-ந் தேதி காலை 10.15 மணிக்கு சென்னை கடற்கரையை சென்றடையும்.

இந்த ரெயில் நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய வழித்தடங்கள் வழியாக செல்லும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்