திருத்தணியில் தனியார் நிறுவன காவலாளி வெட்டிக்கொலை

திருத்தணியில் தனியார் நிறுவன காவலாளி வெட்டிக்கொலை கொல்லப்பட்டார்.;

Update:2025-06-03 12:54 IST

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி(60) இவர் தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் அவர் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து ரவி மீது பாய்ந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு கண்இமைக்கும் நேரத்தில் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் விரைந்து வந்து பார்வையிட்டு இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

கொலை சம்பவம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருவதால் அந்த கிராமத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுக்காக 30 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்