10.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் - ராமதாஸ் அறிவிப்பு
டிசம்பர் 12-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதியின் மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க கோரியும், அதுவரை இடைக்கால தீர்வாக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கோரியும் வருகின்ற 5.12.2025-ல் நடத்த திட்டமிடப்பட்ட அறவழி ஆர்ப்பாட்டம் 12.12.2025-ல் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அறவழி ஆர்பாட்டத்தினை தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் எதிரில் மிகச்சிறப்பாக நடத்திட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி நிர்வாகிகள் ஆங்காங்கே செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்தி, பிரசாரம் செய்து சமூக நீதிக்கான போராட்டமான அறவழி ஆர்பாட்டத்தினை அனைத்து சாதியினரையும் ஒன்றிணைத்து மாபெரும் வெற்றியடையச் செய்ய தேனீக்களை போல சுறுசுறுப்பாக செயலாற்றிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.