தெலுங்கானா முதல்-மந்திரி பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-08 11:42 IST

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேவந்த் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் மகிழ்ச்சியோடும், நல்ல உடல்நலத்தோடும் இன்னும் பல்லாண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்டுச் சிறந்திட விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்