10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்
விடைத்தாள் நகலைப் பெற பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம்;
சென்னை,
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் மே 19-ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
விடைத்தாள் நகலைப் பெற பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம்.தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்; ரூ.275 கட்டணமாக செலுத்தி விடைத்தாளின் நகல்களை பெறலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது .