திருவண்ணாமலையில் இரவு வெளுத்து வாங்கிய கனமழை

கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்பட்டது.;

Update:2025-06-10 06:22 IST

தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி,மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று இரவு கனமழை பெய்தது. கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்